1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 20 மார்ச் 2018 (15:02 IST)

திரைப்பட பாணியில் ஓடும் வாகனத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் கைது

ஓடும் வாகனத்தில் ஏறி தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெடுஞ்சாலை திரைப்படத்தில் ஓடும் வாகனத்தில் ஏறி கொள்ளையடிக்கும் சம்பவத்தைப் போல உசிலம்பட்டியைச் சேர்ந்த முட்டிகணேஷ் என்பவன் வாகனத்தில் ஏறி தார்பாய்களை கிழித்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடி வந்துள்ளான். இவன் மீது பல்வேறு வழக்குகள் நிழுவையில் உள்ளது.
 
இந்நிலையில் அவனை கைது செய்துள்ள போலீஸார் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவன் மீதான குற்றம் நிரூபிக்கப்படவே அவன் சிறையில் அடைக்கப்பட்டான்.