1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (16:12 IST)

தொடங்கியது அமைச்சரவை கூட்டம் : 7 பேரின் விடுதலை தீர்மானம் நிறைவேற்றப்படுமா?

தலைமைச் செயலகத்தில் முதலமைசர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 வருடங்களுக்கும் மேல் சிறையில் வாடும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
 
சமீபத்தில் இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 7 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என நீதிபதி கோகாய் என தீர்ப்பளித்தார். எனவே, தமிழக அரசு சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று மாலை அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் கூடியுள்ளது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பிஎஸ் மற்றும் அமைச்சர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
 
எனவே, 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.