1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (11:06 IST)

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்யுங்கள் - தமிழக அரசு கோரிக்கை

மறைந்த பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 25 வருடங்களுக்கும் மேல் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.

 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
 
அதேபோல், எமது தந்தையை கொலை செய்தவர்களை நானும் எனது சகோதரியும் முழுமையாக மன்னித்துவிட்டோம். நாங்கள் பல வருடங்களாக கவலையுடனும், கோபத்துடனும் இருந்தது உண்மையே, எனினும் தற்போது அவர்களை மன்னித்துவிட்டோம்' என காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல்காந்தியும் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 சிறைக் கைதிகளையும் விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசு மத்திய அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது.