இடைத்தேர்தல் வெற்றி – திமுக, அதிமுக எம்.எல்.ஏ.கள் நாளை பதவியேற்பு !
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் நாளைப் பதவியேற்க உள்ளனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலோடு சேர்த்து 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் 38 இடங்களைக் கைப்பற்றி அசத்திய திமுக கூட்டணி, இடைத்தேர்தலில் 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதனால் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதையடுத்து வெற்றி பெற்ற திமுக மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா நாளை நடக்க இருக்கிறது. சபாநாயகர் அறையில் நடைபெறும் இந்த நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.
திமுக எம்.எல்.ஏக்கள் விவரம் :-
-
ஆம்பூர்-வில்வநாதன்,
-
ஆண்டிப்பட்டி-மகாராஜா,
-
அரவக்குறிச்சி-செந்தில் பாலாஜி,
-
குடியாத்தம்-காத்தவராயன்,
-
ஓசூர்-சத்யா,
-
ஓட்டப்பிடாரம்-சண்முகையா,
-
பெரம்பூர்-ஆர்.டி்.சேகர்,
-
பெரியகுளம்-சரவணக்குமார்,
-
பூந்தமல்லி-கிருஷ்ணசாமி,
-
தஞ்சாவூர்- நீலமேகம்,
-
திருப்பரங்குன்றம்-சரவணன்,
-
திருப்போரூர்-இதயவர்மன்,
-
திருவாரூர்-பூண்டி கலைவாணன்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் :-
-
அரூர்-சம்பத்குமார்,
-
மானமதுரை-நாகராஜன்,
-
நிலக்கோட்டை-தேன்மொழி,
-
பாப்பிரெட்டிப்பட்டி-கோவிந்தசாமி,
-
பரமகுடி-சதன் பிரபாகர்,
-
சாத்தூர்-ராஜவர்மன்,
-
சோளிங்கர்-சம்பத்,
-
சூலூர்-கந்தசாமி,
-
விளாத்திகுளம்-சின்னப்பன்.