திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (15:36 IST)

பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து...6 பேர் படுகாயம்

கடலூர் மாவட்டம்  சிதம்பரம் அருகே அரசுப்பேருந்து  ஒன்று சாலையோரப் பக்கத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் புறவழிசாலையில் அரசு பஸ் சென்றுகொண்டிருக்கும்போது, சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில்,  ஓட்டுநர்  ,  நடத்துநர் உள்ளிட்ட 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  இவர்கள் அனைவரும் அண்ணாமலை நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.