நாய் மீது மோதிய அரசு பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்!
நாய் மீது அரசு பேருந்து மோதியதால், பேருந்து ஓட்டுனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தி மதுரை அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் செக்காணூரனி என்ற பகுதியில் அரசு போக்குவரத்து பணிமனை ஓட்டுநராக நமச்சிவாயம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஒன்பதாம் தேதி சோழவந்தான் பேருந்து நிலையத்தை நோக்கி பேருந்தை இயக்கி கொண்டிருந்தபோது, திடீரென நாய் மீது மோதியதாக தெரிகிறது.
இதனால் நாயின் காலில் காயம் ஏற்பட்ட நிலையில், அதை கவனிக்காமல் பேருந்து ஓட்டுனர் பேருந்தை இயக்கி சென்று விட்டார். இது குறித்து காசி விசுவநாதர் என்ற வழக்கறிஞர் மதுரை மண்டல பொது மேலாளருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஓட்டுனர் நமச்சிவாயம் விசாரணை செய்யப்பட்டு, அதன் பின் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சம்பவம் அரசு ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva