1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 10 மார்ச் 2024 (11:09 IST)

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு என்று கூறுவது சூழ்ச்சி: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

pr pandian
பெங்களூரு நகரில் வரலாறு காணாத வகையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு என்று கர்நாடகா கூறி வருவது சூழ்ச்சி என்றும் இதை காரணமாக வைத்து மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் பி ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு என கர்நாடக அரசு போய் பிரச்சாரம் செய்து வருகிறது என்றும் இதை காரணம் காட்டி மேகதாது அணை கட்டுவதற்கு அனுதாபம் தேட சூழ்ச்சி செய்து வருகிறது என்றும் இதை தமிழக முதல்வர் முறியடிக்க வேண்டும் என்றும் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்

பெங்களூரில் பொதுமக்கள் மிகுந்த தண்ணீர் கஷ்டத்தில் இருக்கும் நிலையில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை என்பதால் அலுவலகங்கள் மட்டும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பெங்களூர் உட்பட கர்நாடகா முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு என்பது கர்நாடக அரசு கூறுவது சூழ்ச்சி என்று பி.ஆர்.பாண்டியன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva