திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2022 (16:43 IST)

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது

Flight
விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் இருந்து இன்று இண்டியோ விமானம் இன்று புறப்பட தயாராக இருந்தபோது, அப்போது,ஒரு  மர்ம நபர் தொலைபேசி வாயிலாக விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி மிரட்டல் விடுத்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த விமான நிலைய அதிகாரிகள், உடனே சென்னையில் இருந்து துபாய் செல்ல, 167 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானம் செல்வதில் தாமதம் ஆகியுள்ளது.

தற்போது விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.