வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2022 (08:15 IST)

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

petrol
சென்னையில் கடந்த 97 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று 98வது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னை உள்பட இந்தியா முழுவதும் இன்னும் ஒரு சில மாதங்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை என்ற தகவல் பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இருப்பினும் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதால் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது