ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 மே 2021 (10:46 IST)

ஓ.பன்னீர்செல்வம் – தங்க தமிழ்செல்வன் கடும் போட்டி! – போடியை பிடிப்பது யார்?

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் போடி தொகுதியில் முன்னிலை வகிப்பதில் திமுக – அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. 234 தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உட்பட சுயெட்சை வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தமாக 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் போடி நாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக சார்பில் முன்னாள் அதிமுக பிரமுகரான தங்க.தமிழ்செல்வன் ஆகியோர் போட்டியிட்டனர். இந்நிலையில் போடி வாக்கு எண்ணிக்கையில் தங்க.தமிழ்செல்வன் 6,538 வாக்குகள் முன்னைலையில் உள்ளார். அதிமுக ஓ.பன்னீர்செல்வம் 6,414 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். 100 வாக்கு வித்தியாசத்தில் இழுபறி நீடிப்பதால் போடியில் கடும் போட்டி நிலவி வருகிறது.