வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (16:53 IST)

யார் விலகினாலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்: அண்ணாமலை

கூட்டணியில் இருந்து யார் விலகினாலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என அண்ணாமலை பேச்சு.

 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. அனைத்து மாநகராட்சிகளிலும் உள்ள மேயர் தேர்தல் உள்பட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  அதிமுகவும் பாரதிய ஜனதா கட்சியும் ஒரே நேர்கோட்டுப் பாதையில் செல்கிறது. அதிமுக, பாஜக கூட்டணி ஒரே படகில் பயணிக்கிறது. கூட்டணியில் இருந்து யார் விலகினாலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று கூறியுள்ளார்.