திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 25 மார்ச் 2024 (16:02 IST)

மூட்டை மூட்டையாக வந்த பாஜக கொடி தொப்பிகள் பறிமுதல்

சென்னை வில்லிவாக்கத்தில் லாரிகளில் மூட்டை மூட்டையாக வந்த பாஜக கொடி, தொப்பிகள் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது.

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில்,  தேர்தலை ஒட்டி மக்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.6.2 கோடி மதிப்பிலான தங்கத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 
அதேபோல் சில இடங்களில் பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக செய்திகள் வெளியானது.
 
இந்த நிலையில்,சென்னை வில்லிவாக்கத்தில் லாரிகளில் மூட்டை மூட்டையாக வந்த பாஜக கொடி தொப்பிகள் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது.
 
ஆவணங்களின்றி 500க்கும் மேற்பட்ட மூட்டைகளில்   அடுக்கி கண்டெய்னர் லாரிகளில் கொண்டு வரபப்ட்ட பாஜக கட்சி கொடி மற்றும் தொப்பிகள் தேர்தல்  பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.