1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 மார்ச் 2024 (12:25 IST)

பாஜகவிலிருந்து அதிமுகவுக்கு தாவிய ஐ.டி விங் பிரமுகர்! – கோவை அரசியலில் பரபரப்பு!

SP Velumani
மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக ஐடி விங் செயலாளர் அதிமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி முன்னதாக பிரிந்த நிலையில் தற்போது இரு கட்சிகளும் தனித்தனியாக வேறு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை எதிர்கொள்கின்றன.

இதை தொடர்ந்து நடந்து வரும் பல்வேறு கட்சி தாவல் சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவராகவும், தமிழக பாஜகவின் அடையாளமாகவும் தொடர்ந்து முன்னிறுத்தப்படும் அண்ணாமலையை வெற்றி பெற செய்ய பாஜகவினர் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில்தான் பாஜக ஐடி விங் மாநில செயலாளரும், கோவை பெருங்கோட்ட பொறுப்பாளருமாக செயல்பட்டு வந்த செல்வபிரபு இன்று அதிமுகவில் இணைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இன்று அவர் அதிமுகவில் இணைந்தது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K