ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 மார்ச் 2024 (11:21 IST)

தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை சரிபார்த்து மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை 20 நாட்களில் சரிபார்த்து எண்ணி  அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கிருஷ்ணகிரி தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை சரிபார்த்து மறு மறு எண்ணிக்கைக்கு தேவையான உதவிகளை வழங்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவு   பிறப்பித்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி அதிமுக எம்.எல்.ஏ. அசோக் குமார் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் செங்குட்டுவன் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் அசோக்குமார் 96,050 வாக்குகளும் திமுக வேட்பாளர் செங்குட்டுவன் 95 ஆயிரத்து 250 வாக்குகளும் பெற்றிருந்தனர். தபால் வாக்குகள் 650ம் ஒருவேளை திமுகவுக்கு கிடைத்திருந்தால் முடிவு மாறி இருக்காது என்றாலும் தோல்வி வித்தியாசம் வெகுவாக குறைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran