திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 23 நவம்பர் 2022 (11:40 IST)

ராகுல் காந்தியுடன் நடக்கும் நடிகைகளுக்கு பணம் கொடுக்கப்படுகிறதா? பாஜக குற்றச்சாட்டு

rahul
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக நடை பயணம் செய்து வரும் நிலையில் அவருடன் நடக்கும் நடிகைகளுக்கு பணம் கொடுக்கப்படுவதாக பாஜக குற்றச்சாட்டு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ராகுல்காந்தி கன்னியாகுமரியில் நடைபயணத்தை தொடங்கிய நிலையில் தற்போது அந்த பயணம் காஷ்மீரை நோக்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது 
இந்த நிலையில் ராகுல்காந்தி நடை பயணம் செய்யும்போது பல்வேறு தரப்பினர் அவருடன் நடந்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக கடந்த சில நாட்களாக பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த நடிகர் நடிகைகளும் நடந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஒற்றுமை பயணத்தில் நடக்கும் நடிகைகள் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பணம் பெற்றுக் கொண்டு நடந்து வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கடுமையாக மறுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva