Daily Horoscope

சி வி சண்முகம் சரியா பெர்பாமன்ஸ் பண்ணல… பாஜகவினர் பதிலடி!

Updated: புதன், 7 ஜூலை 2021 (16:22 IST)
சி வி சண்முகம் சரியாக பெர்பாமன்ஸ் செய்யாததால்தான் தோற்றார் என பாஜகவின் மாநிலப் பொருளாளர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்ததே காரணம் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியபோது நான் மூன்றாவது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருப்போம் என்றும் ஆனால் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் பாஜக கூட்டணி தான் என்றும் அவர் கூறினார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

மேலும் இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசியபோது அதிமுகவின் வாக்குறுதிகள் மக்களிடம் போய் சேரவில்லை என்று கூறினார். திமுகவின் வாக்குறுதிகளை மக்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டது தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்றும் அதிமுகவின் வாக்குறுதிகள் மக்களிடம் போய் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சி வி சண்முகத்தின் கேள்விக்குப் பதிலளித்துள்ள பாஜகவின் மாநில பொருளாளர் ஆர் எஸ் சேகர் ‘பாஜகவுடன் கூட்டணி எனத் தெரிந்துதான் சி வி சண்முகம் தேர்தலில் நின்றார். இப்போது பாஜக மீது குற்றச்சாட்டு சொல்வது ஏற்க முடியாது. தனக்கு வாக்களித்தவர்களை அவர் அவமானப்படுத்துகிறார். கடந்த 5 ஆண்டுகளில் அமைச்சராக இருந்த போது சி.வி.சண்முகம் சரியாக பெர்ஃபாமென்ஸ் செய்யாததால்தான் தோற்றார்.

 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments