திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (16:17 IST)

1 கோடி வீடுகளுக்கு தேசிய கொடி வழங்க பாஜக திட்டம் !

India flag
ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆம் ஆண்டு தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி நாட்டில் அனைவரும் இதைக் கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்தில் பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவரும் 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் சமூகவலைதளங்களில் உள்ள டிபியில்  தேசிய கொடிகை வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்..

இந்த நிலையில், வீடு தோறும் தேசியக் கொடி என்ற திட்டத்தின் கீழ் இம்மாதம் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றும்படி மத்திய அரசு கூறியுள்ளது.

இந்த நிலையில், அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜகவினர், தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலு சுதந்திர தினவிழாவின்போது, தேசிய கொடியை பறக்கவிட  திட்டமிட்டுள்ளது. அதேபோல், பள்ளிகள், கல்லூரிகளிலும் சுந்திர போராட்ட தியாகிகளை  நினைவூக்ட்டும் பொருட்டு பல நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.