1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (09:08 IST)

செஸ் விளம்பரத்தில் அவர் படம் இருந்திருக்கணும்..! – பிரதமர் மோடிக்கு ஆதரவாக சீமான்!

தமிழ்நாடு முழுவதும் செய்யப்பட்ட செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் இடம்பெறாதது குறித்து சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக சென்னையில் நடைபெறும் நிலையில் கடந்த ஒரு மாத காலமாகவே செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக தமிழக அரசு பல இடங்களில் விளம்பரங்களை செய்தது. சென்னையில் பல பேருந்து நிறுத்தங்களில் செஸ் ஒலிம்பியாட் விளம்பர பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன.

இந்த விளம்பர பலகைகளில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறாதது குறித்து அதிருப்தி தெரிவித்த பாஜகவினர் சிலர் பிரதமர் மோடியின் ஸ்டிக்கரை அந்த விளம்பர பலகைகளில் ஒட்டினர். அந்த படத்தின் மீது வேறு சிலர் கருப்பு மை பூசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் செஸ் விளம்பரத்தில் பிரதமர் மோடி படம் இடம்பெறாதது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தமிழ்நாடு அரசு பிரதமரை அழைத்துவிட்டு அவருக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால் அது இத்தனை கோடி தமிழ்மக்களையும் அவமானம் செய்வது இல்லையா? செஸ் விளம்பரங்களில் பிரதமரின் படம் இடம்பெற செய்திருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.