1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 31 மே 2018 (09:54 IST)

அய்யாக்கண்ணு மீது தாக்குதல் - பாஜகவினர் அட்டுழியம்

மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணுவை பாஜகவினர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில், மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினார். 
 
மரபணு மாற்றப்பட்ட விதைகளின்மூலம் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை சாப்பிட்டு வந்தால் 50% ஆண்கள் தங்களுடைய ஆண்மையை இழக்க வாய்ப்புண்டு. இதனால் பெண்களின் கருத்தரிக்கும் சக்தியும் குறையும் என கூறினார்.
மரபணு விதைகளுக்கு எதிராக அய்யாக்கண்ணு உள்ளிட்ட சில விவசாயிகள் முழக்கமிட்டபடி போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது அங்கு வந்த பாஜகவினர் சிலர் அய்யாக்கண்ணு மீதும், அங்கு போராடியவர்கள் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. அய்யாக்கண்ணு மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.