வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (07:50 IST)

ஒரு பூனையை புலியாக்கியது திராவிட மாடல் அரசு.. மகா விஷ்ணு கைது குறித்து பாஜக பிரமுகர்..!

ஒரு பூனையை புலியாக்கிய பெருமை தான் திராவிட மாடல் அரசுக்கு கிடைத்துள்ளது என பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

மகா விஷ்ணு கைது எதிர்பார்த்தது தான்.  ஆனால் சுய சிந்தனையோ,  சட்ட அறிவோ இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் அவசர  அலங்கோல நடவடிக்கை.  உயர்நீதிமன்றத்தில் இ‌ந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது, விடியா திமுக அரசு தன் தான்தோன்றித் தனமான நடவடிக்கைகளினால் பல்வேறு வழக்குகளில் நீ‌திப‌திக‌ளிடம் குட்டுப்பட்டதை விட அதிகமாக, மிக அழுத்தமாக விமர்சிக்கப்படும்.  

தானே  பேச அழைத்து தானே பேசியது தவறு என வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுப்பது வேடிக்கை.   ஒரு பூனையை புலியாக்கிய பெருமை தான் திராவிட மாடல் அரசுக்கு!

முன்னதாக சென்னை அசோக் நகர் பள்ளியில் மகாவிஷ்ணு என்ற பேச்சாளர் பேசியது சர்ச்சைக்கு உள்ளானது என்பதும் மூடநம்பிக்கைகள் குறித்து அவர் மாணவர்கள் மத்தியில் பேசியதை அடுத்தும் கண்டனங்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளிகள் குறித்து அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் நேற்று ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய போது அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva