1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 28 டிசம்பர் 2019 (12:25 IST)

மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்கல: சிதம்பரத்தை சீண்டும் எச்.ராஜா!

சிறை தண்டனை அனுபவித்து வந்தும், சிதம்பரத்தின் நா கொழுப்பு இன்னும் குறையவில்லை என எச்.ராஜா விமர்சித்துள்ளார். 
 
ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 106 நாள்கள் சிறைவாசத்துக்குப் பின் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில், பாஜக ஒரு கங்கை நதி போல, அதில் மூழ்கி எழுந்தால் புனிதமாகிவிடுகிறார்கள் என்று கூறியிருந்தார். 
 
அதாவது பாஜகவுடன் நெருக்கம் காட்டினால் குறிப்பிட்ட நபர் மீதான வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதை சுட்டிக்காட்டி சிதம்பரம் இவ்வாறு பேசினார். ஆனால், இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா. அவர் கூறியதாவது, 
 
ப.சிதம்பரம் ஊழல் வழக்கில் 106 நாள்கள் சிறையிலிருந்து வந்தது எட்டு கிலோ எடை குறைந்ததாக கூறினார். ஆனால் அவரது நா கொழுப்பு இன்னும் குறையவில்லை. மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்கல இதே போல தான் ப.சிதம்பரத்தின் நா கொழுப்பு குறையவில்லை.
 
இன்னும் இரண்டு நாள்கள் இருந்திருந்தால் 108 நாள்கள் ஆகியிருக்கும். 108 ஒரு நல்ல எண். ஆனால், அவருக்கு அந்த புண்ணியம்கூட கிடைக்கவில்லை. ஒரு ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்தவரின் கருத்துக்கு என்னிடம் விளக்கம் கேட்பதையே நான் அவமானமாக கருதுகிறேன் என கடுமையாக விமர்சித்துள்ளார்.