Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோட்டாவிடம் தோல்வியடைந்த பாஜக

Updated: ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (18:13 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகளை விட மிக குறைவாக பெற்று படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

 
19 சுற்றுகளாக நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நிறைவடைந்தது. சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். திமுக சார்பில் போட்டியிட்ட மருதுகணேஷ் 24,651 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
 
நாம் தமிழர் சார்பில் போட்டியிட்ட கலைக்கோட்டுதயம் 3,802 வாக்குகள் பெற்று நான்காம் இடம்பிடித்தார். பாஜக சார்பில் போட்டியிட்ட கரு.நாகராஜன் 1,368 வாக்குகள் பெற்று கடைசி இடம்பிடித்தார். நோட்டாவில் 2,348 வாக்குகள் பதிவாகியுள்ளது.
 
இந்நிலையில் பாஜக நோட்டாவில் பதிவான வாக்குகளை விட மிக குறைவாக வாக்குகள் பெற்றுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் பாஜக கேலி செய்து வருகின்றனர்.

எல்லாம் காட்டு

வேலை செய்யலனா சம்பளம் இல்ல!.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை..

அமித்ஷாவும் பதவி விலக வேண்டும்.. கரப்பான்பூச்சி கட்சி தலைவர் திடீர் கோரிக்கை...!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் விவகாரம்.. உச்சநீதிமன்றம் சென்ற கோவில் நிர்வாகம்...

ஜனநாயக முறையில் போராட்டம் நடத்த கூட அனுமதி இல்லையா? விஜய் அரசுக்கு திருமாவளவன் கண்டிப்பு..

பாஜகவில் சேருமாறு என் மகனுக்கு மிரட்டல் வருகிறது.. அபிஜித் தாயார் அதிர்ச்சி தகவல்...

அடுத்த கட்டுரையில்
Show comments