திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 ஜூலை 2022 (08:47 IST)

பெண்ணை தாக்கிய திமுக அமைச்சர்?? – அண்ணாமலை விடுத்த எச்சரிக்கை!

திமுக அமைச்சர் ஒருவர் மனு அளிக்க வந்த பெண்ணை தாக்கியதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் KKSSR ராமச்சந்திரன் தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை அமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் விருதுநகரில் பாலவனத்தம் பகுதியில் அமைச்சர் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றபோது பெண் ஒருவர் கோரிக்கை மனு அளித்ததாகவும், அதற்கு அமைச்சர் அந்த பெண்ணை தாக்கியதாகவும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் கருத்திட்டுள்ள அவர் “மக்கள் என்ன உங்கள் அடிமைகளா? விருதுநகர்,பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த திமுக அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை தமிழ்நாடு பாஜக முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!” என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.