வியாழன், 10 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (07:25 IST)

’பிரியாணி மேன்' அபிஷேக் மீது மேலும் ஒரு வழக்கு.. மீண்டும் கைது!

’பிரியாணி மேன்' என்று கூறப்படும் அபிஷேக் மீது ஏற்கனவே ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது இன்னொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

பிரியாணி மேன் அபிஷேக் ரபி மீது ஏற்கனவே அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டு  இருக்கும் நிலையில் தற்போது கிறிஸ்தவ மதத்தை இழிவு படுத்தியதாக மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே  யூடியூபில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது, செம்மொழி பூங்கா குறித்து இழிவாக பேசியது ஆகிய காரணங்களால் அவர் கைது செய்யப்பட்டுள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இன்னொரு வீடியோவில் கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் அவர் பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் புழல் சிறையில் இருந்த அபிஷேக் ரபியை சென்னை சைபர் கிரைம் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். இதனால் அவருக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.

யூடியூபர் இர்பானுடன் வார்த்தை போரில் ஈடுபட்ட அபிஷேக் ரபி தற்போது இரண்டு வழக்குகளில் ஜாமீன் பெற்றால் மட்டுமே வெளியே வரும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva