Daily Horoscope
✕

சிறப்பு காட்சியுடன் வெளியானது பிகில்..

Written By Arun Prasath
Updated: வெள்ளி, 25 அக்டோபர் 2019 (08:46 IST)
விஜய் நடித்த “பிகில்” திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது சிறப்பு காட்சிக்கான அனுமதியுடன் இன்று வெளியானது.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய பிகில் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியிட திரைப்பட குழு தயாரானது. இந்நிலையில் தீபாவளியோடு விஜய் திரைப்படம் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருந்தனர்.

ஆனால் தமிழக எந்த திரைப்படத்திற்கும் காலை 5 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என அறிவித்தது. இதனனையடுத்து விஜய் ரசிகர்கள் மிகவும் மனவேதனையில் இருந்தனர். அதன்பின்பு திரைப்பட குழுவினர் தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் பிறகு பிகில் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகள் அனுமதி அளிக்கப்பட்டது. இதனை பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அர்ச்சனா தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்தார். இந்நிலையில் இன்று காலை 5 மணி சிறப்பு காட்சிகளுடன் பிகில் திரைப்படம் இன்று வெளியானது. இதனை விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடிவருகின்றனர்.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments