திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2019 (22:14 IST)

பிகில் சிறப்பு காட்சி: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு சில மணி நேரங்களே இருப்பதால் முதல் நாள் முதல் காட்சியை காண ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இப்போதே தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் குவிய தொடங்கிவிட்டதால் தியேட்டரில் மினி தீபாவளியை நடந்து கொண்டிருக்கிறது 
 
இந்த நிலையில் பிகில் படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிட தமிழக அரசு இன்னும் அனுமதி கொடுக்காமல் இருந்ததால் விஜய் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் இருந்தனர். இருப்பினும் படக்குழுவினர் தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இன்று இரவுக்குள் எப்படியும் அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைத்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது 
 
இதனையடுத்து தற்போது பிகில் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி அவர்கள் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்துள்ளதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று பதிவு செய்துள்ளார் 
 
இதனால் தமிழக அரசு பிகில் படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி அளித்துள்ளது உறுதியாகி உள்ளது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருப்பதால் நாளை அதிகாலை முதல் காட்சிகள் தொடங்கும் என்பது உறுதியாகி உள்ளது