திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2019 (20:08 IST)

வேலை முடிஞ்சிருச்சுன்னா வீட்டுக்கு வரவேண்டியதானே: அட்லியை திட்டிய மனைவி

விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் சென்சார் பணிகள் முடிந்து ஒருவாரம் ஆகிவிட்ட போதிலும் இந்த படத்தின் ஒரிஜினல் காப்பியை இன்று காலை தான் தயாரிப்பாளரிடம் அட்லி ஒப்ப்டைத்தார். நேற்று இரவு வரை அவர் பிகில் படத்தை மெருகேற்றியதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இன்று மாலை முதல் அட்லி தனது டுவிட்டரில் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். விஜய்யுடன் பணியாற்றிய அனுபவம், நயன்தாராவின் கேரக்டர், ஏ.ஆர்.ரஹ்மான் கூடுதலாக போட்டுக்கொடுத்த இரண்டு பாடல்கள், அஜித் குறித்த தனது கருத்து என சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்து கொண்டிருந்த நிலையில் திடீரென அட்லியின் மனைவி ப்ரியாவிடம் இருந்து ஒரு கேள்வி வந்தது
 
அதான் வேலை முடிஞ்சிருச்சுல்ல, இன்னும் வீட்டுக்கு வந்து என்னோட டைம் ஸ்பெண்ட் பன்னாம அங்கேஎ என்ன டுவிட்டரில் பேட்டி? என்ற கேட்க அதற்கு அட்லி ‘இதோ உடனே அஞ்சு நிமிஷத்துல வந்துர்ரேன்’ என்று ரொமான்ஸ் உடன் பதிலளித்துள்ளார். அட்லி மற்றும் அவருடைய மனைவியின் செல்லச்சண்டையை ரசிகர்கள் வித்தியாசமாக கமெண்ட் அளித்து வருகின்றனர். ஒரு ரசிகர் ‘அட்லிக்கு ஒரு முழம் மல்லிகைப்பூ பார்சல்’ என்று கமெண்ட் பதிவிட்டுள்ளார்.