ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 31 மே 2024 (13:08 IST)

பிக்பாஸ் தனலட்சுமிக்கு அம்மா அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்.. பரபரப்பு தகவல்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனலட்சுமிக்கு அவரது அம்மா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் அதில் இனிமேல் தாய் மகள் உறவு கிடையாது என்றும் தன்னுடைய பெயரை தனலட்சுமி பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தனலட்சுமி. மக்களின் பிரதிநிதியாக கலந்து கொண்ட இவருக்கு பிக் பாஸ் பார்வையாளர்கள் ஒரு கட்டத்தில் நல்ல வரவேற்பு கொடுத்தாலும் அதன் பின்னர் அவரே தனது பெயரை கெடுத்துக் கொள்ளும் வகையில் செயல்பட்டார் என்றும் கோபக்காரி என்ற பெயரை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மா தனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் இனிமேல் தனது அம்மாவுக்கும் தனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய பெயரையும் நான் பயன்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளதாகவும் கூறிய தனலட்சுமி இதற்கான காரணத்தை தான் சொல்ல விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு தனலட்சுமிக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வீட்டு பிரச்சனையை எதற்காக வெளியே சொல்கிறீர்கள்? உங்களுக்குள்ளே வைத்துக் கொள்ளுங்கள்’ என்று பலர் அறிவுரை கூறியவர் என்றனர்.

Edited by Mahendran