1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Biggboss aari idea to election commission

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும்: பிக்பாஸ் ஆரி

பிக் பாஸ் ஆரி
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வங்கி கணக்கை முடக்க வேண்டும் என்றும் தேர்தல் முடிந்தவுடன் வங்கி கணக்கை திரும்ப ரிலீஸ் செய்யலாம் என்றும் பிக் பாஸ் நடிகர் ஆரி ஐடியா கொடுத்துள்ளார்

பாகிஸ்தானுக்கு உள்ளே சென்று அடித்து விட்டு வரும் அளவுக்கு நம்மிடம் திறமை இருந்தும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை நம்மால் நிறுத்த முடியவில்லை என்று அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்

இதற்கு ஒரே வழி தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல்வாதிகளின் வங்கி கணக்குகளை முடக்கி விட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் ஒரு வேட்பாளர் எவ்வளவு செலவு செய்ய வேண்டுமோ அந்த தொகை மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் அதன் பிறகு அவர்களது வங்கி கணக்கை தேர்தல் முடிந்தவுடன் ரிலீஸ் செய்து விடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இது நகைச்சுவைக்காக கூறவில்லை என்றும் பணம் கொண்டு செல்லும் ஒரு அரசியல்வாதி கூட மாட்ட மாட்டேங்கிறார் என்று ஆனால் அப்பாவி பொதுமக்கள் இந்த தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகளிடம் சிக்கி சிக்கலில் உள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வங்கி கணக்கை முடக்க வேண்டும் என்ற சிறப்பான ஐடியாவை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்..! தேர்தல் ஆணையத்துக்கு அதிரடி உத்தரவு..!!