திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 24 நவம்பர் 2018 (16:59 IST)

தேசிய ஏரோபிக்ஸ் போட்டியில் அரையிறுதியில் நுழைந்த பரணி வித்யாலயா

சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான தேசியளவிலான ஏரோபிக்ஸ் போட்டிகள் தில்லி அருகிலுள்ள குர்கானில் நடைபெற்று வருகின்றன. கடந்த 20-ம் தேதி முதல் தொடங்கிய இந்த போட்டியானது வரும் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க கரூர் பரணி வித்யாலயாவைச் சேர்ந்த ஹேமந்த், தர்ஷனா, தீக்சிதா, அஷ்மிதா, ஜஷ்மிதா, செல்சியா கேத்தரின், சமிதா, சஷ்டிகா, தேஜஸ்வினி, ராஜேஸ்வரி, நிஷிதா, கீர்த்தனா, பிரியதர்ஷினி, தனுஸ்ரீ ஆகிய 14 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் கால் இறுதிக்கு தகுதி பெற்று, தற்போது  இன்று அந்த குழு அரையிறுதிக்கு தகுதி பெற்று விளையாடி வருகின்றனர்.



இந்த இசையோடு விளையாடும் இந்த ஏரோ பிக்ஸ் விளையாட்டினை காண, புதுடெல்லியை அடுத்த குர்கானில் பார்வையாளர்கள் குவிந்து வருகின்றனர். 25 ம் தேதி இறுதி போட்டி நடைபெற உள்ளது என்று கொங்கு சகோதய பள்ளி முதல்வர்களின் கூட்டமைப்பு தலைவரும், தமிழ்நாடு சி.பி.எஸ்.இ பள்ளிகளின் முதல்வர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவருமான முனைவர் ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


சி.ஆனந்தகுமார்