மோடி வெற்றி பெற வேண்டுமென்று தெரு தெருவாக அலைந்தவர்தான் வைகோ

admk
Last Updated: திங்கள், 12 நவம்பர் 2018 (18:53 IST)
கரூரில், காந்திகிராமத்தில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடப்பணிகளை கரூர் பாராளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை நேரில் பார்வையிட்டார். அப்போது, மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்ததோடு, விரைவில் அனைத்து வேலைகளும் நடைபெறவேண்டுமென்றும், மக்களின் பயன்பாட்டிற்கு வரும் அளவிற்கு சிறப்பான முறையில் மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணிகள் அமைய வேண்டுமென்றார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை  செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். இந்தியா ஏழை நாடு கிடையாது., அதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும், இங்கிலாந்து தான் ஏழை நாடாக மாறி வருகின்றது. இந்தியா ஒரு வளர்ந்து வரும் நாடு, ஒரு பெரிய வல்லரசாக வருகின்ற வரைக்கு இந்த நாடு வளர்ந்து கொண்டு வருகின்றது என்றார். ஆகவே உலக அளவில் பாராட்டு கிடைக்க கூடிய வகையில் உலக அளவில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்ததோடு, பொருளாதாரம் மேம்பட்டு வருகின்றது.

மேலும், மு.க.ஸ்டாலின் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு குறித்து கேட்டதற்கு., ஸ்டாலின் இன்று சந்திரபாபு நாயுடுவிடம் பேசினார் நாளை மோடியிடமும் பேசுவார். அரசியலில் எதுவும் நடக்காலாம். மேலும் மோடியை விட ஸ்டாலின் நல்லவர் என்று சந்திரபாபு நாயுடு கூறி இருப்பதை சுட்டிக்காட்டிய போது, தம்பித்துரை., 4 ½ வருடங்களாக மோடி நல்லவராக சந்திரபாபு நாயுடுவிற்கு இருந்த நேரத்தில் தற்போது ஸ்டாலின் நல்லவரா ? அதே நேரத்தில் 4 ½ வருடங்களாக எதிர்த்த மோடி அரசில், அமித்ஷாவை அழைத்து நினைவேந்தல் நடத்தியதோடு ஒரு இணக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டார், அப்போது பாஜக இந்துத்துவா என்று தெரியாதா ? என்றார்.

மேலும், சந்திரபாபு நாயுடுவின் முயற்சி பாராளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியை கொடுக்கும் என்று வை.கோ கூறி இருப்பதை செய்தியாளர்கள் கேட்டதற்கு., இதே வை.கோ தான் மோடி ஜெயிப்பதற்காக தேர்தல் உடன்பாடு வைத்து, மோடி வெற்றி பெற வேண்டி தெரு, தெருவாக அழைந்தவர், காங்கிரஸ் கூட்டணி ஒழிய வேண்டும்,. காங்கிரஸ் கட்சி ஒழிய வேண்டுமென்று கூறி, காங்கிரஸ் கட்சியினால் தான் சிங்களத்தமிழன் கொல்லப்பட்டான் என்று காங்கிரஸ் கட்சியினை கடுமையாக சாடியவர் தான் வை.கோ., அதே வை.கோ தான், மோடியுடன் உடன்பாடு வைத்து தேர்தல் பணியாற்றியவர். மோடி வெற்றி பெறுவதற்கு வை.கோ வும் ஒரு காரணம் என்றார். அதே போல தான் திராவிட முன்னேற்றக்கழகம் தோற்பதற்கும் வை.கோ தான் காரணம் ஏனென்றால் மக்கள் நலக்கூட்டணி என்று மூன்றாவது அணி வைத்துக் கொண்டு, தோற்கடித்தார். ஆகவே ஸ்டாலினுக்கு வை.கோ மீது கோபம் உள்ளது.  கட்டாயம் அந்த காண்பிப்பார் என்றார்.

சி.ஆனந்தகுமார்


இதில் மேலும் படிக்கவும் :