திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (11:28 IST)

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... வங்கி செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்!!

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் வங்கி செயல்பாடுகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

 
கொரோனா காரணமாக கடந்த சில மாதங்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் இந்த ஊரடங்கு ஆகஸ்ட் மாதம் வரை நீண்டுள்ளது. எனவே, வங்கி சேவைகள் மற்றும் செயல்பாடுகளில் சில கட்டுபாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. 
 
ஆம், சதவித பணியாளர்களுடன் தமிழகத்தில் வங்கிகள் இயங்கும். இது நாள் வரை குறிப்பிட்ட சேவைகள் மட்டுமே வங்கிகள் வழங்கி வந்த நிலையில் இனி அனைத்து சேவைகளும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி வங்கிகள் செயல்படும். அதேபோல வாடிக்கையாளர்கள் முகக்கவசம், தனிநபர் இடைவேளை ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.