திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் கைது: போலி ஆதார் அட்டைகள் பறிமுதல்..!
திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், ஊத்துக்குளி போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது போலி ஆதார் அட்டைகளை வைத்து வங்கதேசத்தை சேர்ந்த சிலர் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து போலி ஆதார் அட்டையுடன் தங்கியிருந்த 30 வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களிடம் இருந்த ஆதார் போலி ஆதார் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை 30 பேர்கள் சிக்கி உள்ளதாகவும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து இன்னும் வேறு யாராவது தமிழகத்தில் தங்கி இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Edited by Siva