1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 28 ஜனவரி 2025 (12:57 IST)

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, மாடு, கோழி பலியிட தடை.. மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல்..!

Thiruparangkundram
திருப்பரங்குன்றம்   மலையில்   மீது ஆடு, கோழி, மாடு பலியிட கூடாது என்றும் மலை மீது அசைவ உணவு கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ராஜபாளையத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஆடு சேவல் உடன் திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதேபோல் மலை மேல் உள்ள தர்காவில் ஆடு கோழி வெட்டி விருந்து கொடுக்கப் போவதாக சில முஸ்லிம் அமைப்பினர் மலையேறும்  போது தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் மதுரை ஐகோர்ட் கிளையில் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் மதுரை திருப்பரங்குன்றம்  முருகப்பெருமானின் மலை மீது ஆடு கோழி மாடு பலியிட தடை விதிக்க வேண்டும் என்றும் அசைவ உணவு கொண்டு செல்லவும் தடை விதிக்க வேண்டும் என்றும் அதேபோல் மலையின் பெயரை மாற்றக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

இது போன்ற வேறு சில வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருப்பதால் இந்த மனு பிப்ரவரி 4ஆம் தேதி பட்டியலிட மதுரை ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

Edited by Mahendran