ஞாயிறு, 2 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 ஜனவரி 2025 (17:07 IST)

சமணர் குகைக்கு பச்சை பெயிண்ட் அடித்த மர்ம நபர்கள்! - திருப்பரங்குன்றத்தில் தொடரும் மத பிரச்சினை!

Tiruparankundram

திருப்பரங்குன்றத்தில் இந்து - இஸ்லாமிய அமைப்புகள் இடையே முரண்பாடு நிலவி வரும் நிலையில் சமணர் குகைக்கு பச்சை பெயிண்ட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் ஒன்றான கோயில் அமைந்துள்ளது. மலை மீது இஸ்லாமிய தர்கா ஒன்று அமைந்துள்ள நிலையில் மறுபுறத்தில் பழங்கால சமணர் குகை ஒன்றும் உள்ளது.

 

இப்படி பல்வேறு சமயங்களின் தலங்கள் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் சமீபமாக மத ரீதியான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. சமீபத்தில் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில் விழா நடந்த நிலையில், அதில் பலியிடுவதற்காக சிலர் ஆடுகளை கொண்டு வந்தனர். ஆனால் ஆடு வெட்ட அனுமதியில்லை என அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

 

இந்நிலையில் அப்பகுதியில் அமைந்துள்ள சமணர் குகையை ஆக்கிரமிக்கும் விதமாக அக்குகைக்கு பச்சை பெயிண்ட் அடித்துள்ளனர் மர்ம நபர்கள் சிலர். பழங்கால தொல்லியல் சின்னமாக விளங்கும் சமணர் குகையில் பெயிண்ட் அடிக்கப்பட்டது குறித்து தொல்லியல் அலுவலர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K