1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 15 நவம்பர் 2023 (12:42 IST)

தமிழகத்தில் நவம்பர் 20ஆம் தேதி வரை கனமழை பெய்யும்: பாலச்சந்திரன் தகவல்..!

தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மற்றும்  காற்றின் வேக மாறுபாடு காரணமாக நவம்பர் 17ஆம் தேதி முதல்  நவம்பர் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  
 
தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரிசா கடலோர பகுதியை நோக்கி செல்லும் என்றும் இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  
 
மேலும் தமிழக கடற்கரை ஓர பகுதிகளில் 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில்  காற்று வீசும் என்பதால் நவம்பர் 18 வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.  
 
மேலும் சென்னையில் மழை தொடரும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்றும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.
 
Edited by Mahendran