செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2022 (16:17 IST)

அண்ணாவை அவமதித்து பேசிய பத்ரி சேஷாத்ரி..! – ஆலோசனை குழுவிலிருந்து நீக்கி நடவடிக்கை!

Badri Sheshadri
முன்னாள் முதல்வர் அண்ணாவை விமர்சித்து பேசியதாக சர்ச்சை எழுந்த பத்ரி சேஷாத்ரியை இணையக்கல்வி ஆலோசனை குழுவிலிருந்து தமிழக அரசு நீக்கியுள்ளது.

கல்வி செயற்பாட்டளரும், கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனராகவும் இருந்து வருபவர் பத்ரி சேஷாத்ரி. சமீபத்தில் இவர் அண்ணா குறித்து பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை சந்தித்துள்ளது. பத்ரி சேஷாத்ரி தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக்கல்வி ஆலோசனை குழுவில் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் அவரது சர்ச்சை பேச்சை தொடர்ந்து அவரை ஆலோசனை குழுவிலிருந்து தமிழக அரசு நீக்கி மாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக எம்.பி டாக்டர் செந்தில்குமார் “கழக தொண்டர்களுக்கு ஓர் நற்செய்தி. பத்ரி சேஷாத்ரி தமிழ் இணையக் கல்விக் கழக ஆலோசனை குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.” என பதிவிட்டுள்ளார்.

அதை ரீட்வீட் செய்துள்ள பத்ரி சேஷாத்ரி “இதுதான் அண்ணாவின் வெற்றியா?” என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Prasanth K