செவ்வாய், 21 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified வியாழன், 20 அக்டோபர் 2022 (15:40 IST)

பிரின்ஸ் படத்தை நண்பர்களிடம் ப்ரமோட் செய்யும் சத்யராஜ்!

பிரின்ஸ் படத்தின் ரிலீஸ் நாளை உலகமெங்கும் திரையரங்கில் வெளியாக உள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பிரின்ஸ்’  திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இன்று திடீரென இந்த திரைப்படத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப் படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் இருபத்தி மூன்று நிமிடங்கள் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தப் படத்தின் நீளம் திடீரென 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதனால் இந்த படம் சுமாராக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் படத்தில் நடித்துள்ள சத்யராஜ், தனது நெருங்கிய நண்பர்களிடம் படம் ஆரம்பம் முதல் இறுதிவரை நகைச்சுவையோடு இருக்கும் என சிபாரிசு செய்து வருகிறாராம்.