வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (18:34 IST)

மதுரையில் கருணாநிதிக்கு சிலை: அனுமதி கேட்டு அழகிரி மனு

மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு மதுரையில் மதுரை பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில் வெண்கல சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மு.க.அழகிரி மதுரை மாவட்ட ஆட்சி தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சமீபத்தில் சென்னையில் அமைதிபேரணி நடத்திய மு.க.அழகிரி அடுத்தகட்டமாக மதுரையில் கருணாநிதிக்கு சிலை வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அனுமதி கேட்டு அவர் மாவட்ட ஆட்சி தலைவருக்கு முறைப்படி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்திற்கு மாவட்ட ஆட்சி தலைவர் விரைவில் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மு.க.அழகிரி தனது கடிதத்தில் 'நான் 35 ஆண்டுகளாக வாழுகின்ற மதுரை மாநகரில் மதுரை பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில் தலைவர் கலைஞர் அவர்களின் வெண்கல சிலை அமைக்க வழங்கி உதவிட வேண்டுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.