வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (23:30 IST)

மன அழுத்தம் & தற்கொலை எண்ணங்களை தடுத்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மரணத்தினை தேடி நாம் செல்ல கூடாது ? சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது மன அழுத்தம் & தற்கொலை எண்ணங்களை தடுத்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கரூர் எஸ்.பி அதிரடி பேச்சு
 
மரணத்தினை தேடி நாம் செல்ல கூடாது ? சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது மன அழுத்தம் & தற்கொலை எண்ணங்களை தடுத்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கரூர் எஸ்.பி அதிரடி பேச்சு
 
கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் வாழ்தல் இனிது என்கின்ற தலைப்பில் மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களை தடுத்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி கரூர் அருகே நடைபெற்றது. கரூர் அடுததுள்ள புலியூர் ராணி மெய்யம்மை பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் கூடுதல் காவல்கண்காணிப்பாளர் கீதாஞ்சலி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், நமது வாழ்க்கையே சுவாரஸ்யம் நிறைந்தது. அதை வாழ்க்கையினை இனிமையாக பலகிக்கொள்ள வேண்டும், எளிமையான விஷயங்கள் எல்லாம் இருக்க, எல்லோருக்கும் எல்லாம் உள்ளது அது தான் வாழ்க்கையினை நேர்மறை சிந்தனையுடன் கருதுகின்றனர். மரணம் என்பதனை தானாக முடிவு செய்யும் தைரியம் உள்ளவர்கள் யாரும் இந்த உலகத்தில் யாரும் கிடையாது அந்த அளவிற்கு தைரியம் உள்ளவர்கள் அந்த அளவிற்கு தைரியம் உள்ளவர்கள் எந்த வேலையினையும் சிறப்பாக செயல்பட முடியும், ஆகவே அதனை புரியவைக்க வேண்டும், அந்த தற்கொலை செய்து கொள்பவர்களை முன் கூட்டியே காக்க நாம் உறுதி மொழி எடுத்து கொள்ள வேண்டுமென்றும், ஆகவே அது போல யாரும் ஆக கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.