வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 14 ஜனவரி 2021 (09:20 IST)

பரபரப்பாக நடைபெற்று வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: இதுவரை 4 பேர் காயம்!

ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் மதுரை அருகே உள்ள பாலமேடு அலங்காநல்லூர் மற்றும் அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு மிகச்சிறப்பாக நடைபெறும் என்பது தெரிந்ததே 
 
அந்த வகையில் இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது என்பதும் இந்த ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் ஏராளமானோர் மாடுபிடி வீரர்கள் குவிந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
சற்று முன்னர் ஆரம்பித்த இந்த ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்து வரும் மாடுகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகிறார்கள் என்பதும் மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இதுவரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 4 வீரர்கள் காயம் அடைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதில் காளைகளின் உரிமையாளர்கள் இருவர் என்றும் மாடுபிடி வீரர் ஒருவர் என்றும் பார்வையாளர் ஒருவர் என்றும் இவர்கள் நால்வரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதும் ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது