அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... 5 பேர் காயம் !
இன்று தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு மதுரை அவனியாபுரம் மற்றும் வாடிவாசல் போன்ற இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க உலகில் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர்.
இதில், மதுரை அவனியாபுரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 70 காளைகள் களத்தில் இறக்கப்படுகிறது. இன்று, 700 காளைகளுக்கு டோக்கன் வழங்கப்ப்பட்டுள்ளது. காளையை அடக்குவதற்காக காளையர்களும் ஆர்வத்துடன் களத்தில் குதித்துள்ளனர். காளையை அடக்க முயன்ற வீரர்களில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு பெண் காளையை களத்திற்கு அழைத்து வந்திருந்தார். அப்போது, ஒரு வீரர் அந்தக் காளையை அடக்கினார். இதற்கு வீரருக்கு பரிசு வழங்கப்பட்டது. இருப்பினும் அந்தப் பெண்ணின் ஆர்வத்தைப் பாராட்டி அவருக்கு ஒரு சீலை பரிசு வழங்கப்பட்டது.