புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 14 ஜனவரி 2020 (07:14 IST)

போகி கொண்டாட்டத்தால் சென்னை முழுவதும் புகை மண்டலம்: வாகன ஓட்டிகள் அவதி!

தமிழகம் முழுவதும் இன்று போகி பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் ஒரே புகை மண்டலமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் தெருவில் நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமத்தில் இருப்பதாக கூறப்படுகிறது
 
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது போகி பண்டிகையின் சாரம்சம். பொங்கலுக்கு முந்தைய நாளான போகி அன்று தமிழகமெங்கும் பழைய பொருட்களை தீயிட்டு எரிப்பது பண்டை காலம் முதலே வழக்கமாக இருந்து வருகிறது. 
 
போகி பண்டிகை கொண்டாடுவதால் சென்னையில் காற்று மாசு அதிகம் ஏற்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்து இருந்தாலும் ஆண்டாண்டு காலமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையை மக்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
 
சிகரெட் புகை, வாகனங்களின் புகையால் ஏற்படும் மாசு கட்டுப்பாடு குறித்து பேசாத போலி சமூக போராளிகள் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும்போதும், போகி அன்று பழைய எரித்தல் குறித்து மட்டும் பேச வந்துவிடுகிறார்கள் என பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.