1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2023 (15:04 IST)

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: ஹரியானாவில் முக்கிய குற்றவாளி கைது..!

arrest
கடந்த சில நாட்களுக்கு முன்னால் திருவண்ணாமலையில் ஒரே நேரத்தில் நான்கு ஏடிஎம் மையங்களில் மர்ம கும்பல் கொள்ளையடித்தது என்பதும் கொள்ளையடித்த பணத்தின் மதிப்பு 75 லட்சம் என்றும் கூறப்பட்டது. 
 
இதனை அடுத்து கொள்ளையாளர்களை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆந்திரா கர்நாடகா ஹரியானா ஆகிய மாநிலங்களில் குற்றவாளிகளை தேடி வந்தன. இந்த நிலையில் ஹரியானாவில் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளைக்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இது குறித்து அந்த கொள்ளையனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வந்ததாகவும் அந்த கொள்ளையனின் கூட்டாளிகளையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
முதல் கட்ட விசாரணையில் கொள்ளைக்கு பிறகு பெங்களூர் சென்று அங்கிருந்து விமான மூலம் ஹரியானாவுக்கு கொள்ளையர்கள் தப்பி உள்ளது தெரியவந்துள்ளது
 
Edited by Mahendran