ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை அடித்தது எப்படி? நடித்து காட்டிய கொள்ளையன்

Written By siva
Updated: செவ்வாய், 29 ஜூன் 2021 (07:32 IST)
ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை அடித்தது எப்படி? நடித்து காட்டிய கொள்ளையன்
சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் உள்ள டெபாசிட் இயந்திரத்தில் நூதனமான முறையில் சமீபத்தில் கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அமீர், வீரேந்திரன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று ஏடிஎம் எந்திரத்தில் கொள்ளையடித்தது எப்படி என போலீசார் முன் அமீர் கொள்ளையடித்து காட்டியுள்ளான் 
 
பெரியமேடு எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் கொள்ளை அடிப்பது போல் அமீர் நடித்து காட்டியதாகவும் கொள்ளையில் ஈடுபட்டது எப்படி என நடித்து காட்டியதை போலீசார் வீடியோ பதிவு செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இந்த வீடியோ பதிவின் ஆதாரத்தை வைத்து காவல் துறையினர் வழக்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏடிஎம் இயந்திரங்களில் உள்ள குறைபாடுகள் நீக்கப்படும் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

எல்லாம் காட்டு

இந்தியாவில் 1500க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அமெரிக்க தமிழர் கைது.. பிடிபட்டது எப்படி?

தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: கரப்பான் பூச்சி கட்சி அறிவிப்பு..

அப்பா அம்மாவுடன் ஜனநாயகன் படம் பார்த்த முதல்வர் விஜய்.. அதிகாரிகளும் பார்த்ததாக தகவல்..

உறுதி அளித்தால் உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயாராக இருக்கிறேன்- சோனம் வாங்சுக்

ஜெயில் ஜாலியா இருக்கு!.. விரைவில் ஆட்சி மாறும்!. மார்க்கண்டேயன் பேட்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments