வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (13:52 IST)

சட்டப்பேரவை தேர்தல்.! திமுக ஒருங்கிணைப்பு குழுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை..!

Stalin
அமெரிக்க சென்றுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று இரவு 7:30 மணிக்கு கழக ஒருங்கிணைப்பு குழுவுடன், காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  
 
தொழில் முதலீடுகளை முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். இந்தப் பயணத்தில் இதுவரை மொத்தம் 10 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 
 
இந்த நிலையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தி.மு.க. ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.  

 
இன்று இரவு 7:30 மணிக்கு  காணொலி வாயிலாக மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒருங்கிணைப்பு குழுவின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்தும் கேட்டறியுள்ளார்.