வெள்ளி, 6 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (10:57 IST)

தமிழ் மண்ணில் இருப்பது போல் உணர்கிறேன்.! சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை..!

Stalin
அமெரிக்க வாழ் தமிழர்களுடன் இருப்பது தமிழ் மண்ணில் இருக்க கூடிய உணர்வை தருகிறது என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அமெரிக்கா சென்றுள்ளார். 17 நாட்கள் பயணத்தை முடித்துவிட்டு வரும் செப்டம்பர் 14-ம் தேதி அவர் நாடு திரும்புகிறார்.  இந்தப் பயணத்தில் இதுவரை மொத்தம் 10 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 
 
கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில், ரூ 400 கோடியில், சுமார் 500 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் ஓமியம் நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
 
இந்நிலையில் சிகாகோவில் நடைபெற்ற வட அமெரிக்கா தமிழ்ச்சங்க கலைவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அந்த விழாவில் தமிழ் பாரம்பரிய முறைப்படி பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து சென்றார். விழாவில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், அமெரிக்க வாழ் தமிழர்களின் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் என்று தோன்றுகிறது என்றார். 

 
தமிழகத்தில் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எப்படி இருக்குமோ, அதைப்போல அல்ல அதை விட மிக சிறப்பாக இந்த நிகழ்ச்சி உள்ளது என்று கூறினார். அமெரிக்க வாழ் தமிழர்களுடன் இருப்பது தமிழ் மண்ணில் இருக்க கூடிய உணர்வை தருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.