அரவிந்த் கெஜ்ரிவாலின் விமர்சனம் ஏற்கத்தக்கது அல்ல - நடிகை குஷ்பு
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் புதிய 500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களிடம் 2000 ரூபாய் நோட்டு வழக்கத்தில் இல்லாத நிலையில் நேற்று திடீரென 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் மக்கள் தங்களிடமுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்தது.
இதற்கு பல அரசியல்வாதிகள் கருத்துக்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், இதற்குத்தான் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டுமென்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
முதல்வர் கெஜ்ரிவாலில் இந்த விமர்சனத்திற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, ஆணவத்தின் முழு உருவம். அரசியல் கருத்துகள் கூற ஒரு தன்மையிருக்க வேண்டும். நமது பிரதமரின் பதவிக்கு மரியாதை தர வேண்டும்.. அரவிந்த் கெஜ்ரிவாலின் விமர்சனம் ஏற்கத்தக்கது அல்ல என்று தெரிவித்துள்ளார்.