1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (10:37 IST)

அரியர் மாணவர்கள் பாஸ் கிடையாது... என்ன செய்யப்போகிறது அரசு!

அரியர் மாணவர்களை பாஸ் போட முடியாது என ஏஐசிடிஇ எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. 
 
கொரோனா காரணமாக தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் கலை அறிவியல், தொழில்நுட்ப படிப்புகள் மற்றும் பொறியியல் படித்து வரும் மாணவர்களில் இறுதியாண்டு மாணவர்களை தவிர மற்றவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. 
 
இதனைத்தொடர்ந்து அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கும் தேர்வின்றி தேர்ச்சி வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு அண்ணா பல்கலைக்கழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. 
 
அதாவது தேர்வு எழுதாமல், அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கக்கூடாது என்றும், மீறினால் பல்கலைக்கழக அங்கீகாரம் ரத்து செய்ய நேரிடும் என்று ஏஐசிடிஇ தெரிவித்ததாக கூறியது. ஆனால் இதனை தமிழக அரசு மறுத்தது. 
 
இந்நிலையில், அரியர் தேர்வுகளை ரத்து செய்து அரியர் மாணவ்ர்களை பாஸ் போட முடியாது என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏஐசிடிஇ எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. 
 
ஏஐசிடிஇ எழுதிய கடிதத்தில் தேர்வு எழுதாமல் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கக்கூடாது இதனை மீறினால் பல்கலைக்கழக அங்கீகாரம் ரத்து செய்ய நேரிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.