திங்கள், 26 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (14:51 IST)

ரஜினிக்காக பாஜகவில் இருந்து விலகிய அர்ஜூன் மூர்த்தி மீண்டும் பாஜகவில் இணைப்பு!

arjuna
பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த அர்ஜூனா மூர்த்தி ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என அந்த பதவியில் இருந்து விலகினார் 
 
இந்த நிலையில் ரஜினி கட்சி ஆரம்பிக்காததால் தற்போது மீண்டும் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். 
 
ரஜினி கட்சி தொடங்கியதாக கூறப்பட்டதால் தன்னுடைய அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் பதவியை விலகி ரஜினி கட்சியின் நிலைமைகளை அர்ஜூன மூர்த்தி கவனித்தார் 
 
அதன்பின் ரஜினி அரசியலில் இருந்து பின்வாங்கிய நிலையில் அகில இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார்/ இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார் 
 
இன்று அவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் பாஜகவில் சேர்ந்த அர்ஜுனா மூர்த்திக்கு மீண்டும் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது